செய்திகள்
சிகந்தர் ரசா

முதல் இன்னிங்சில் இலங்கையை விட 113 ரன்கள் முன்னிலை: ஜிம்பாப்வே 2-வது டெஸ்டில் வெற்றி பெறுமா?

Published On 2020-01-29 14:45 GMT   |   Update On 2020-01-29 14:45 GMT
ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 406 ரன்கள் குவித்த நிலையில், இலங்கையை முதல் இன்னிங்சில் 293 ரன்னில் சுருட்டியது.
ஜிம்பாப்வே - இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் ஹராரேயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே கேப்டன் சீன் வில்லியம்சின் (107), சிகந்தர் ரசா (72), டெய்லர் (62) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் 406 ரன்கள் குவித்தது.

பின்னர் இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜிம்பாப்வேயின் கட்டுக்கோப்பான பந்து வீச்சால் இலங்கை அணியால் எளிதாக ரன்கள் குவிக்க இயலவில்லை. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை 2 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை 293 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மேத்யூஸ் அதிகபட்சமாக 64 ரன்கள் சேர்த்தார். ஜிம்பாப்வே அணி சார்பில் சிகந்தர் ரசா 7 விக்கெட் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 113 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டால் இலங்கையை வீழ்த்தி தொடரை டிரா செய்ய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News