செய்திகள்
சூப்பர் ஓவரில் அசத்திய ரோகித் சர்மா, கேஎல் ராகுல்

முதல் பந்தில் இருந்தே அதிரடியா? அல்லது கடைசியில் அதிரடியா?: சூப்பர் ஓவர் குறித்து ரோகித் சர்மா...

Published On 2020-01-29 12:26 GMT   |   Update On 2020-01-29 12:26 GMT
இதற்கு முன் ஒருபோதும் சூப்பர் ஓவரை சந்தித்தது கிடையாது, முதல் பந்தில் இருந்தே அதிரடியை தொடங்க வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து தெரிந்திருக்கவில்லை என்றார் ரோகித் சர்மா.
நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 179 ரன்கள் அடித்தது. பின்னர் 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது.

கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். முதல் பந்தில் ராஸ் டெய்லர் சிக்சர் அடித்ததால் நியூசிலாந்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷமி கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரை அவுட்டாக்கியதால் நியூசிலாந்து கடைசி நான்கு பந்துகளில் ஒரு ரன்னே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணியும் 179 ரன்களே எடுத்ததால் போட்டி ‘டை’யில் முடிந்தது.

இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவின் வெற்றிக்கு 18 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. முதல் பந்தை ரோகித் சர்மா எதிர்கொண்டார். முதல் பந்தில் இரண்டு ரன்களும், 2-வது பந்தில் ஒரு ரன்களும் மட்டுமே அடித்தார். ஆனால் கடைசி இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அணியை வெற்றி பெற வைத்தார்.

சூப்பர் ஓவர் குறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘இதற்கு முன் சூப்பர் ஓவரில் விளையாடியதே கிடையாது. ஆகையால் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமா? அல்லது ஒரு ரன் எடுத்து விட்டு என்னால் முடியும் என்று பார்த்துக் கொள்ளலாமா? என்பது குறித்து எனக்கு தெரிந்திருக்கவில்லை.

இது சிறந்த ஆட்டம். நான் அவுட்டான விதம் ஏமாற்றம் அளித்தது. இன்னிங்சை கடைசி வரை கொண்டு செல்ல விரும்பினேன். இந்த போட்டியில் வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றுவோம் என்பது எங்களுக்குத் தெரியும். அணியில் உள்ள முக்கியமான வீரர்கள் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றது முக்கியமானது’’ என்றார்.
Tags:    

Similar News