செய்திகள்
ஷிகர் தவான்

காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் இருந்து தவான் விலகல்

Published On 2020-01-21 15:18 IST   |   Update On 2020-01-21 15:18:00 IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது ஏற்பட்ட காயம் குணமடையாததால் நியூசிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார் தவான்.
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான். பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது பீல்டிங் செய்தபோது இடது கை தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு பீல்டிங்கும் செய்யவில்லை. பேட்டிங்கும் செய்யவில்லை.

ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பார்த்த பின்னர்தான் அவரது காயத்தின் வீரியம் குறித்து தெரியவரும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்று நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி ஆக்லாந்து புறப்பட்டது. அப்போது தவான் செல்லவில்லை.

இந்திய அணி இரண்டு குழுவாக செல்கிறது. இரண்டு குழுவிலும் அவர் செல்லவில்லை. இதனால் தவான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார் எனக் கூறப்படுகிறது.

Similar News