செய்திகள்
ஆஸ்திரேலியா U19 கிரிக்கெட் அணி

U19 உலக கோப்பை: நைஜீரியாவை நசுக்கியது ஆஸ்திரேலியா

Published On 2020-01-21 09:25 GMT   |   Update On 2020-01-21 09:25 GMT
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் U19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா நைஜீரியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இதில் கிம்பெர்லியில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய அணி, நைஜீரியாவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா அணி, ஆஸ்திரேலியாவின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 30.3 ஓவர்களில் 61 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. பின்னர் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்து அணிக்கு 43.4 ஓவர்களில் 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 43.4 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 184 ரன்களே எடுத்தது. இதனால் வெஸ்ட்இண்டீஸ் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.
Tags:    

Similar News