செய்திகள்
சச்சின் தெண்டுல்கர், வால்ஷ்

பயிற்சியாளராகிறார் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர்

Published On 2020-01-21 08:24 GMT   |   Update On 2020-01-21 08:24 GMT
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான காட்சி கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் நடுவராக பணியாற்ற இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டும் நோக்கில் வருகிற பிப்ரவரி 8-ந்தேதி சனிக்கிழமை அன்று ‘புஷ்பயர் பேஷ்’ என்ற பெயரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ள தீயணைப்பு வீரர்கள், மீட்பு மற்றும் நிவாரண பணியாளர்கள், தன்னார்வலர்கள், அவசரகால பணியாளர்கள் ஆகியோரை அங்கீகரிக்கும் வகையில் போட்டி நடத்தப்படும்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ஷேன் வார்னே மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் மோதுகின்றன.

இந்த அணிகளுக்கு பயிற்சியாளர்களாக முறையே கோர்ட்னி வால்ஷ் மற்றும் சச்சின் தெண்டுல்கர் செயல்படுகின்றனர்.  இந்த போட்டியில் கிடைக்கும் வருவாய் மற்றும் நிதிகள் அனைத்தும் ஆஸ்திரேலிய செஞ்சிலுவை பேரிடர் நிவாரண மற்றும் மீட்பு பணிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த போட்டியில் ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களான ஆடம் கில்கிறிஸ்ட், பிரெட் லீ, ஜஸ்டின் லாங்கர், மைக்கேல் கிளார்க், ஷேன் வாட்சன் மற்றும் அலெக்ஸ் பிளாக்வெல் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
Tags:    

Similar News