செய்திகள்
டு பிளிசிஸ்

டி20 உலக கோப்பை வரை ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை: டு பிளிசிஸ் திட்டவட்டம்

Published On 2020-01-20 13:42 GMT   |   Update On 2020-01-20 13:42 GMT
இங்கிலாந்துக்கு எதிரான மோசமான ஃபார்மால் ஓய்வு பெறுவார் என்ற வதந்தி கிளம்பிய நிலையில், டி20 உலக கோப்பை வரை ஓய்வு பெற மாட்டேன் என்று டு பிளிசிஸ் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. ஆனால் 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் படுதோல்வி அடைந்தது.

அணியின் கேப்டன் டு பிளிசிஸ் மிகவும் மோசமான ஃபார்மில் உள்ளார். 3-வது டெஸ்டில் 44 ரன்கள்தான் எடுத்தார். இந்தத் தொடரில் அவரின் சராசரி 20-ஐ விடவும் குறைவு. 24-ந்தேதி தொடங்கும் கடைசி போட்டியில் ஜெயித்தால் மட்டுமே தொடரை சமன்  செய்ய முடியும்.

மோசமான தோல்வியால் டு பிளிசிஸ் ஓய்வு பெற இருக்கிறார் என்று செய்திகள் பரவின. இந்நிலையில் டி20 உலக கோப்பை வரை அணியில் நீடிப்பேன். அதன்பிறகே ஓய்வு. தற்போது ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று டு பிளிசிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
Tags:    

Similar News