செய்திகள்
ஜோஸ் மவுரினோ

ஜோஸ் மவுரினோவை தலைமை பயிற்சியாளராக நியமித்தது டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர்

Published On 2019-11-20 12:18 GMT   |   Update On 2019-11-20 12:18 GMT
இங்கிலாந்து பிரிமீயர் லீக் கால்பந்தில் விளையாடும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி ஜோஸ் மவுரினோவை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து பயிற்சியாளர் ஜோஸ் மவுரினோ. இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார்.

அதன்பின் எந்த அணியிலும் சேராமல் இருந்தார். இந்நிலையில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி அவரை தலைமை பயிற்சியாளரான நியமித்துள்ளது. 2022-23 பிரிமீயர் லீக் சீசன் வரை அந்த அணியின் பயிற்சியாளராக செயல்படுவார்.

மவுரினோவை தலைமை பயிற்சியாளராக நியமித்தது குறித்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணியின் உரிமையாளர் கூறுகையில் ‘‘கால்பந்து போட்டியில் ஜோஸ் மவுரினோ வெற்றிகரனமான பயிற்சியாளராக விளங்கியவர்.

அவருக்கு சிறந்த அனுபவம் உள்ளது. அவரால் அணிக்கு உத்வேகத்தை ஏற்படுத்த முடியும். சிறந்த யுக்திகளை கொண்டவர். அவர் பணியாற்றிய ஒவ்வொரு கிளப்புகளிலும், மரியாதையை வென்றுள்ளார். வீரர்களுக்கு இடையில் எனர்ஜியை அவரால் கொண்டு வர முடியும் என நாங்கள் விரும்புகிறோம்’’ என்றார். 
Tags:    

Similar News