செய்திகள்
லசித் மலிங்கா

ஓய்வு முடிவில் யு-டர்ன் அடித்த யார்க்கர் புகழ் லசித் மலிங்கா

Published On 2019-11-20 11:49 GMT   |   Update On 2019-11-20 11:49 GMT
டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்குப்பின் ஓய்வு பெறுவேன் என்று தெரிவித்திருந்த மலிங்கா, தற்போது அதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.
இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. துல்லியமான யார்க்கர் பந்து வீச்சால் உலகளவில் புகழ் பெற்றார். டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 30 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார்.

கடந்த ஜூலை மாதம் 50 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 226 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக மலிங்கா கூறியிருந்தார்.

தற்போது அந்த கருத்தில் இருந்து பின்வாங்கி, மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மலிங்கா கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் நான்கு ஓவர்கள்தான் வீச வேண்டும். என்னுடைய திறமைக் கொண்டு என்னால் டி20 கிரிக்கெட் பந்து வீச்சாளராக செயல்பட முடியும் என்று உணர்கிறேன். உலகில் உள்ள ஏராளமான டி20-களில் நான் விளையாடி உள்ளேன். இதனால் இன்னும் இரண்டு ஆண்டுகள் டி20 போட்டிகளில் விளையாட முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News