செய்திகள்
இரண்டு கைகளாலும் பந்து வீசும் தென்ஆப்பிரிக்க வீரர்

இரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்

Published On 2019-11-19 10:08 GMT   |   Update On 2019-11-19 10:08 GMT
தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் இரண்டு கைகளாலும் பந்து வீசி விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
தென்ஆப்பிரிக்காவில் மான்சி சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் கேப் டவுன் பிளிட்ஸ் - டர்பன் ஹீட் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த கேப் டவுன் பிளிட்ஸ் 174 ரன்கள் குவித்தது. பின்னர் 75 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டர்பன் ஹீட் அணி களம் இறங்கியது. 8-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மலோக்வானா வீசினார். இந்த ஓவரின் 7.2-வது பந்தை அவர் வலது கையால் வீசினார். பந்தை எதிர்கொண்ட இடது கை பேட்ஸ்மேன் எர்வீ மிட் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

10-வது ஓவரை மலோக்வானா வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை இடது கையால் வீசினார். பந்தை எதிர்கொண்ட வலது கை பேட்ஸ்மேன் விலாஸ் 8 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டானார்.

இந்த போட்டியில் கேப் டவுன் 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுழற்பந்து வீச்சாளரான மலோக்வானா இரண்டு கைகளாலும் பந்து வீசியதோடு, விக்கெட்டுக்களையும் வீழ்த்தி அனைவரது பார்வையையும் ஈர்த்துள்ளார்.
Tags:    

Similar News