செய்திகள்
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி

நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய பெண்கள் அணி வெற்றி

Published On 2019-11-18 08:54 GMT   |   Update On 2019-11-18 08:54 GMT
மழையால் போட்டி 9 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில், நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி உள்ளூர் நேரப்படி புரோவிடென்ஸ்சில் நேற்றிரவு நடைபெற்றது. மழைக்காரணமாக போட்டி 9 ஓவராக குறைக்கப்பட்டது.

டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி முதலில் பேட்டிங் செய்தது. 9 ஓவர்கள் என்பதால் இந்தியா வீராங்கனைகள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட முயன்றனர். இதனால் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பூஜா மட்டும் 10 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழக்க இந்தியா 9 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் அடித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹெய்லி மேத்யூஸ் 3 விக்கெட்டும், ப்ளெட்சர் மற்றும் கிரிம்மோண்ட் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினர்.

பின்னர் 11 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. அந்த அணியின் மூன்று விராங்கனைகள் இரட்டை இலக்க ரன்களை தாண்டினாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால் இந்திய பெண்கள் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News