செய்திகள்
சதம் அடித்த கெய்க்வார்டு

தியோதர் டிராபி: பாபா அபரஜித், கெய்க்வார்டு சதத்தால் இந்தியா ‘பி’ அபார வெற்றி

Published On 2019-10-31 11:46 GMT   |   Update On 2019-10-31 12:11 GMT
கெய்க்வார்டு, பாபா அபரஜித் ஆகியோரின் சதத்தால் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘பி’ அபார வெற்றி பெற்றது.
தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘பி’ அணிகள் மோதின. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா ‘பி’ அணியின் கெய்க்வார்டு, பன்சால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பன்சால் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெய்ஸ்வால் 34 பந்தில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அடுத்து கெய்க்வார்டு உடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தது. கெய்க்வார்டு 113 ரன்களும், பாபா அபரிஜித் 101 பந்தில் 101 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.

இருவரின் சதங்களால் இந்தியா ‘பி’ 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. பின்னர் 303 ரன்கள் அடித்தால்  வெற்றி என்ற இலக்குடன்  இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. இந்தியா ‘பி’ அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் இந்தியா ‘ஏ’ அணி ரன்கள் சேர்க்க திணறியது.

கேப்டன் விஹாரி மட்டும் தாக்குப்பிடித்து 59 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள்  சொதப்பியதால் இந்தியா ‘ஏ’ 194 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. இந்தியா ‘பி’ 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா ‘பி’ அணி சார்பில் கலாரியா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
Tags:    

Similar News