செய்திகள்
ஷாபாஸ் நதீம்

அறிமுகத்திற்காக 15 ஆண்டுகள் காத்திருந்த ஷாபாஸ் நதீம்

Published On 2019-10-21 11:27 GMT   |   Update On 2019-10-21 11:28 GMT
இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள அனைத்து வீரர்களுக்கும் முன் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனாலும், ஷாபாஸ் நதீமுக்கு 15 வருடம் கழித்துதான் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 30 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் இந்திய அணியில் அறிமுகமானார்.

இவர் கடந்த 2004-ம் ஆண்டு தனது 15 வயதில் முதல்தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். சிறப்பான பந்து வீச்சால் தலைசிறந்த பந்து வீச்சாளரானார். கடந்த மூன்று ரஞ்சி டிராபி சீசனில் அதிகளவில் விக்கெட் வீழ்த்தினார். என்றாலும் இந்தியா அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.



அவருக்குப்பின் முதல்தர போட்டியில் அறிமுகமானவர்கள்தான் தற்போது இந்திய அணியில் விளையாடும் அனைத்து வீரர்களும். அவர்கள் அனைவரும் முன்னதாகவே இந்திய அணியில் அறிமுகமான நிலையில், ஷாபாஸ் நதீம் மட்டும் 15 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

நதீம் 110 முதல்தர போட்டிகளில் 424 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
Tags:    

Similar News