செய்திகள்
ஆண்ட்ரூ மெக்டொனால்டு

ஐபிஎல்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமனம்

Published On 2019-10-21 10:40 GMT   |   Update On 2019-10-21 10:40 GMT
ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் தொடரில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆண்ட்ரூ மெக்டொனால்டை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆண்ட்ரு மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர் இங்கிலாந்தின் லெய்செஸ்டர்ஷைர், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் மெல்போர்ன்  ரெனேகட்ஸ் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.

2009 ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடியுள்ள மெக்டொனால்டு, 2012-13 சீசனில் ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஆல்-ரவுண்டரான மெக்டெனால்டு ஆர்சிபி-யின் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

இவரை மூன்று வருடத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.
Tags:    

Similar News