செய்திகள்
ராகுல் டிராவிட்

ராகுல் டிராவிட் மேற்பார்வையில் 16 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம்

Published On 2019-10-17 10:40 GMT   |   Update On 2019-10-17 10:40 GMT
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரான ராகுல் டிராவிட்டின் மேற்பார்வையில் 16 நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லண்டனில் காமன்வெல்த் மாநாட்டின்போது, கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு (18 வயதிற்கு உட்பட்டோர்) இந்தியாவில் உயர்தர கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துடன் இணைந்து பிசிசிஐ சார்பில் ராகுல் டிராவிட் மேற்பார்வையின் கீழ், தலைசிறந்த பயிற்சியாளர்களை வைத்து போட்ஸ்வானா, கேமரூன், கென்யா, மொசம்பிக், மொரிசியஸ், நமிபியா, நைஜீரியா, ருவாண்டா, உகாண்டா, மலேசியா, சிங்கப்பூர், ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிஜி மற்றும் தான்சானியா நாடுகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பெங்களூர் தேசிய அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி முகாம் வரும் 31-ந்தேதி வரை நடக்கிறது.
Tags:    

Similar News