செய்திகள்
சானியா மிர்சா

விளையாட்டுத்துறை பெண்களை திருமணம் செய்ய மாட்டார்கள் எனக் கூறுவதை நிறுத்துங்கள்: சானியா மிர்சா

Published On 2019-10-03 14:11 GMT   |   Update On 2019-10-03 14:11 GMT
பெண்களிடம் நீங்கள் விளையாடினால் யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் எனக் கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சானியா மிர்சா கூறியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா உலகளவில் பிரபலமாக திகழ்ந்தார். இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

குழந்தை பெற்ற பிறகு இன்னும் டென்னிஸ் போட்டிக்கு திரும்பவில்லை. அடுத்த வருடம் டென்னிஸ் போட்டியில் களம் இறங்க திட்டமிட்டுள்ளார்.

இவர் சிறுமியாக இருக்கும்போது, வெளிப்புற (outdoor) விளையாட்டில் கலந்து கொண்டு விளையாடினால் வெயில் காரணமாக உடல் கருத்து விடும், யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என கூறினார்கள் என்ற சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

சானியா மிர்சா இதுகுறித்து கூறுகையில் ‘‘பெற்றோர்கள், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், அத்தை மற்றும் மாமா போன்றோர், பெண்களிடம் நீங்கள் விளையாடினால் வெயிலில் கருத்து விடுவீர்கள், யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் என்று கூறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

எனக்கு 8 வயதாக இருக்கும்போது என்னை யாரும் திருமணம் செய்து கொள்ளமாட்டார்கள் என்று எல்லோரும் நினைத்தனர். ஏனென்றால், நான் விளையாடினால் கருப்பாகி விடுவேன் என தடுத்தனர். ஆனால், சிறுமியாக இருக்கிறேன். எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்குள்ளே நினைத்துக் கொண்டேன்.

பெண் அழகாக இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது. அதை நியாயப்படுத்தவும் பார்க்கிறார்கள். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. இந்த கலாச்சாரம் மாற வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News