செய்திகள்
ரோகித் சர்மா

கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாராக இருந்தேன்: ரோகித் சர்மா

Published On 2019-10-03 12:27 GMT   |   Update On 2019-10-03 12:27 GMT
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாட கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாராக இருந்தேன் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கியது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியில் தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக தொடக்க வீரராக களம் இறங்கினார்.

முதல் இன்னிங்சிலேயே அபாரமாக விளையாடி 176 ரன்கள் குவித்தார். கிரிக்கெட் விமர்சகர்கள் கடந்த சில மாதங்களாகவே ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், நான் இரண்டு வருடங்களாக தயாராக இருந்தேன் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போது, நான் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவேன் என்று சொல்லப்பட்டது. தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க நான் இரண்டு வருடங்களாக தயாராக இருந்தேன். ஒரு கட்டத்தில் நான் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவேன் என்பதை அறிந்திருந்தேன். ஆகவே, நான் தயாராக இருந்தேன்.



டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்குவது வித்தியாசமானது. உங்களது மனதை அதற்கு ஏற்றபடி பழக்கப்படுத்த வேண்டும். மற்ற அனைத்தையும் விட இதுதான் முக்கியமானது. அதே நேரம் பேட்டிங்கில் சில டெக்னிக் அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.

ஆனால், புதுப்பந்தை எதிர்கொண்டு, ஆட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வது மளதளவில் மிக சவாலானது

நான் பேட்டிங் செய்ய களம் இறங்கும்போது சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டேன். இன்னிங்சை எப்படி அணுக வேண்டும் என்பதில் நான் கொஞ்சம் கூட குழப்பம் அடையவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News