செய்திகள்
சச்சின் தெண்டுல்கர்

டெஸ்டில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்க என்ன வேண்டும்?: விவரிக்கிறார் சச்சின் தெண்டுல்கர்

Published On 2019-10-02 13:14 GMT   |   Update On 2019-10-02 13:14 GMT
இந்திய கிரிகெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் தெண்டுல்கர், டெஸ்ட் போட்டியில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வீரருக்கு இருக்க வேண்டிய திறமை குறித்து விவரித்துள்ளார்.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்படினத்தில் இன்று தொடங்கியது. தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

ரோகித் சர்மாவை நாங்கள் சேவாக்கை போன்று பார்க்கிறோம் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், தொடக்க பேட்ஸ்மேனுக்கு என்னென்ன வேண்டும் என்பதை சச்சின் தெண்டுல்கர் விவரித்துள்ளார்.

பாரம்பரிய கிரிக்கெட் போட்டியான டெஸ்டில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வீரர்கள் குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘தொடக்க வீரராக களம் இறங்கி சாதிப்பது முற்றிலும் மனநிலையை (Mindset) பொறுத்தது. யாராவது தொடக்க வீரராக களம் இறங்கி விளையாட விரும்பினால், அப்புறம் அவருக்கு மாறுபட்ட வகையிலான மனநிலை இருக்க வேண்டியது அவசியம்.

சேவாக் தொடக்க பேட்ஸ்மேனாக வெற்றி கண்டதற்கு, அவருக்கு வெவ்வெறு மனநிலை இருந்தது. ஒருநாள் போட்டி அல்லது டெஸ்ட் போட்டியில் அப்படிபட்ட மனநிலையில்தான் விளையாடினார். இயல்பாகவே அவரது ஆட்டத்தில் ஆக்ரோசம் இருந்தது.

ஏராளமான வீரர்கள் தொடக்க இடத்தில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினார்கள். ஆனால், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறமை சிலருக்குதான் கிடைத்தது. அந்த திறன் சேவாக்கிடம் இருந்தது. தொடக்க வீரர் இடம் அவருக்கு சரியாக பொருந்தியது. ரோகித் சர்மா எப்படி விளையாடுகிறார் என்பதை அறிய சற்று காத்திருக்க வேண்டும்.

சேவாக் முதன்முறையாக இங்கிலாந்து தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும்போது சதம் அடித்தார். அது அவரை வெற்றியாளராக கொண்டு வந்தது, என்றாலும் சில நேரங்களில் அவர் கடுமையான சோதனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் இருந்தது. ஆகவே, இது நம்பர் மட்டுமல்ல. முக்கியமான விஷயம் என்னவென்றால், ரன் போர்டில் நீங்கள் என்ன கொண்டு வருகிறீர்கள் என்பதுதான்.

எந்வொரு இடத்தில் களம் இறங்கினாலும் அவர்களுடைய பாதுகாப்பு தேவை. வீரர்களுக்கு ஏற்றம் இறக்கம் இருக்கும். ஆனால், நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று தெரிந்தால், அவர்கள் மாறுபட்ட விஷயங்களை சிந்திப்பார்கள்’’ என்றார்.
Tags:    

Similar News