செய்திகள்
ஜோகோவிச்

ஜப்பான் ஓபன் டென்னிஸ்: நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்

Published On 2019-10-02 16:56 IST   |   Update On 2019-10-02 16:56:00 IST
ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்.
ஜப்பான் ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நம்பர் ஒன் வீரராக நோவக் ஜோகோவிச் ஜப்பானைச் சேர்ந்த கோ சொயேடாவை எதிர்கொண்டார்.

இதில் ஜோகோவிச் 6-3, 7-5 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸில் தோள்பட்டை காயத்தால் வெளியேறிய ஜோகோவிச், காயம் குறித்து மிகப்பெரிய அளவில் பயப்பட தேவையில்லை என்றார்.

Similar News