செய்திகள்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ரோகித் சர்மா

தொடக்க பேட்ஸ்மேனாக சாதித்த ரோகித்- முதல் போட்டியிலேயே சதம் விளாசினார்

Published On 2019-10-02 08:37 GMT   |   Update On 2019-10-02 10:15 GMT
விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
விசாகப்பட்டினம்:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறங்கினர்.  ரோகித் சர்மா முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கியதால், அவர் மீது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, பந்துகளை பறக்கவிட்டார். 84 பந்துகளில் அரை சதம் கடந்த ரோகித், தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார்.



தேனீர் இடைவேளைக்குப் பிறகு சதம் அடித்து அசத்தினார் ரோகித். 154 பந்துகளில் 10 பவண்டரி, 4 சிக்சருடன் இந்த இலக்கை அவர் எட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்ததால் சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

இதேபோல் மறுமுனையில் ஆடிய மயங்க் அகர்வாலும் பொறுப்புடன் விளையாடி சதத்தை நெருங்கினார்.

மதிய நிலவரப்படி இந்திய அணி முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 190 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
Tags:    

Similar News