செய்திகள்

உலகக்கோப்பை பயிற்சி ஆட்டம் - நியூசிலாந்தை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

Published On 2019-05-29 02:23 GMT   |   Update On 2019-05-29 02:23 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.
லண்டன்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கடைசி பயிற்சி போட்டி வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றுது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் 36 ரன்னும், லிவிஸ் 50 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பொறுப்பாக ஆடிய ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 86 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஜேசன் ஹோல்டர் 47 ரன்னும், அந்த்ரே ரசல் 25 பந்தில் 54 ரன்களும் விளாச வெஸ்ட் இண்டீஸ் 49.2 ஓவரில் 421 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.



தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் பிளெண்டல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். பிளெண்டல் 106 ரன்னும், கேன் வில்லியம்சன் 85 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், நியூசிலாந்து அணி 47.2 ஓவரில் 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News