செய்திகள்

எம்எஸ் டோனிதான் எப்போதும் கேப்டன்: சுரேஷ் ரெய்னா சொல்கிறார்

Published On 2019-05-27 21:15 IST   |   Update On 2019-05-27 21:15:00 IST
எம்எஸ் டோனி விக்கெட் கீப்பராக பணியாற்றுவது வசதியாக இருக்கும் என விராட் கோலி உணர்கிறார். டோனி எப்போதும் கேப்டன் என ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து 2017-ல் இருந்து விலகினார். என்றாலும் எப்போதும் அவர்தான் கேப்டன் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘வீரர்கள் பெயர் அடங்கிய பேப்பரில் டோனி கேப்டனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், மைதானத்தில் விராட் கோலிக்காக எம்எஸ் டோனிதான் கேப்டன். ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பந்து வீச்சாளர்களை வழிநடத்தும் அவருடைய பணி இன்னும் அப்படியேத்தான் இருக்கிறது.



அவர் கேப்டன்களுக்கெல்லாம் கேப்டன். டோனி ஸ்டம்பிற்கு பின்னால் இருப்பதை, விராட் கோலி வசதியாக உணர்கிறார். இதை அவர் ஏற்கனவே ஏற்றுக் கொண்டுள்ளார்’’ என்றார்.
Tags:    

Similar News