செய்திகள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் கேன்சரால் மரணம்

Published On 2019-05-20 15:27 IST   |   Update On 2019-05-20 15:27:00 IST
அமெரிக்காவில் கேன்சருக்கு சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2-வயது மகள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலி. இவர் தற்போது இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். இவருக்கு இரண்டு வயது பெண்குழந்தை இருந்தது. அவள் கேன்சர் நோயால் தாக்கப்பட்டிருந்தாள். அதுவும் அபாயகட்டமான முதிர்ந்த நான்காம் நிலையில் கேன்சர் என கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ஆசிப் அலி சிகிச்சைக்காக தனது மகளை கடந்த மாதம் அமெரிக்கா அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தாள். ஆசிப் அலி நேற்று இங்கிலாந்துக்கு எதிராக கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். இதில் 22 ரன்கள் சேர்த்தார்.

பாகிஸ்தான் அறிவித்த முதல்கட்ட உலகக்கோப்பைக்கான அணியில் ஆசிப் அலி இடம்பெறவில்லை. இன்று மூன்றுபேரை நீக்கி அதற்கான மாற்று வீரர்களை அறிவித்துள்ளது. இதில் ஆசிப் அலி பெயர் இடம்பெற்றுள்ளது.
Tags:    

Similar News