செய்திகள்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சிமோனா ஹாலெப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கிகி பெர்ட்டென்ஸ்

Published On 2019-05-12 12:00 GMT   |   Update On 2019-05-12 12:00 GMT
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீராங்கனையை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரநிலையில் 3-ம் பிடித்த ருமேனியாவின் சிமோனா ஹெலாப், தரநிலையில் 7-ம் இடத்தை பிடித்த நெதர்லாந்தின் கிகி பெர்ட்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.



இதில் கிகி பெர்ட்டென்ஸ் ஆட்டத்திற்கு சிமோனா ஹாலெப்பால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் 6-4, 6-4 என நேர்செட் கணக்கில் பெர்ட்டென்ஸ் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார்.
Tags:    

Similar News