செய்திகள்

ஐபிஎல் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து: நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் அறிவிப்பு

Published On 2019-02-22 11:30 GMT   |   Update On 2019-02-22 11:30 GMT
ஐபிஎல் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கான தொகை புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது கடந்த 14-ந்தேதி தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். புல்வாமா பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

இதனால் இங்கிலாந்தில் மே மாதம் தொடங்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. பாகிஸ்தானை உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று பிசிசிஐ ஐசிசியிடம் வலியுத்த இருக்கிறது.

இந்நிலையில் பாகிஸ்தானுடன் உடனான லீக் ஆட்டத்தை புறக்கணிப்பது, ஒருவேளை நாக்அவுட் சுற்றில் மோத வேண்டியிருந்தால் என்ன செய்தவது என்பது குறித்து முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்து நிர்வாகக்குழு இன்று ஆலோசனை நடத்தியது.

இந்த ஆலோசனைக் கூட்டம் வினோத் ராய் தலைமையில் நடைபெற்றது. அப்போது மார்ச் 23-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்படும் என்றும், அதற்காக ஒதுக்கப்படும் தொகை வீர மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News