செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி - குசல் பேரேராவுக்கு பாராட்டு குவிகிறது

Published On 2019-02-18 05:54 GMT   |   Update On 2019-02-18 05:54 GMT
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய பங்கு வகித்த குசல் பேரேராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. #KusalPerera #SAvSL
கொழும்பு:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் நடந்த முதல் டெஸ்டில் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இலங்கை அணி 304 ரன் இலக்கை எடுத்து வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற குசல் பெரேரா முக்கிய பங்கு வகித்தார். அவர் 153 ரன்கள் குவித்தார். தென் ஆப்பிரிக்காவின் வெற்றி உறுதியான நிலையில் கடைசி விக்கெட்டை வைத்து அபாரமாக விளையாடி ஆட்டத்தை மாற்றி குசல் பெரேரா இலங்கையை வெற்றி பெற வைத்தார்.

கார்டன் கிரீனிட்ஜ் (வெஸ்ட் இண்டீஸ். 214 ரன், இங்கிலாந்துக்கு எதிராக, 1984). லாரா (வெஸ்ட் இண்டீஸ். 153 ரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1999).

ஜெயவர்த்தனே (இலங்கை. 123 ரன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2006), டெண்டுல்கர் (இந்தியா. 103 ரன், இங்கிலாந்துக்கு எதிராக 2008), வி.வி.எஸ். லட்சுமண் (இந்தியா. 103 ரன் இலங்கைக்கு எதிராக 2010). ஆகியோர் வரிசையில் குசால்பெரைரா இணைந்தார்.

இதை தொடர்ந்து குசல் பெரேராவுக்கு பாராட்டு குவிகிறது. இலங்கை முன்னாள் கேப்டன் சங்ககரா கூறியதாவது:-

குசல் பெரேரா மிக சிறந்த வீரர். இதை ஒரு மிக சிறந்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். அவரது ஆட்டத்தை மறக்க இயலாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு முன்னாள் கேப்டன் ஜெயவர்தனே கூறும் போது “குசல் பெரேரா ஒரு அருமையான இன்னிங்சை விளையாடி இருக்கிறார். அவர் நெருக்கடியான நேரத்தில் சிறந்த இன்னிங்சை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தை என்றுமே யாராலும் மறக்க முடியாது” என்றார்.

இதேபோல் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில்விக்ரமசிங்கே, விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ உள்ளிட்டோரும் குசல் பெரேராவை வெகுவாக பாராட்டினார். #KusalPerera #SAvSL
Tags:    

Similar News