செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்: 381 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து படுதோல்வி

Published On 2019-01-27 03:32 GMT   |   Update On 2019-01-27 03:32 GMT
பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. #WIvENG
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றுது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 289 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 77 ரன்னில் சுருண்டது.

212 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஜேசன் ஹோல்டர் (202), டவ்ரிச் (116) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 415 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இரு இன்னிங்சிலும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் 627 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் இங்கிலாந்துக்கு 628 ரன்கள் வெற்றி இலக்காக நிர்யணித்தது.



628 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்தது. ரோரி பேர்ன்ஸ் 39 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் 14 ரன்னில் ஆட்டமிழந்தாலும், பேர்ன்ஸ் சிறப்பாக விளையாடி 84 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரோஸ்டர் சேஸ் பந்து வீச்சில் இங்கிலாந்து விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தன. சேஸ் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்த இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 246 ரன்னில் ஆல்அவுட் ஆனது.



இதனால் இங்கிலாந்து 381 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இரட்டை சதம் அடித்த ஜேசன் ஹோல்டர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நார்த் சவுண்டில் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News