செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் - இலங்கை 91 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து திணறல்

Published On 2019-01-24 06:55 GMT   |   Update On 2019-01-24 06:55 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது. #SLvAUS #JhyeRichardson #PatCummins
பிரிஸ்பேன்:

இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சண்டிமால் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டகாரர் திரிமானே 12 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் சண்டிமால் 5 ரன்னிலும், கருணரத்னே 24 ரன்னிலும், குசல் மெண்டீஸ் 14 ரன்னிலும், தனஜெயா டி செல்வா 5 ரன்னிலும் வெளியேறினர். அதன்பின்னர் ரோசன் சில்வாவுடன் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்த ரோசன் சில்வா 56 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். 91 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறிய, இலங்கை அணி விக்கெட்டுகளை காப்பாற்ற கடுமையாக போராடியது.

தேநீர் இடைவேளையின்போது இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்திருந்தது. விக்கெட் கீப்பர் டிக்வெல்லா(20), பெரேரா (1) ஆகியோர் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், லயன் ஒரு விக்கெட்டும் வீழ்த்தி உள்ளனர். #SLvAUS #JhyeRichardson #PatCummins
Tags:    

Similar News