செய்திகள்

பிக் பாஷ் டி20 லீக்: பிரிஸ்பேன் ஹீட் அணியை வீழ்த்தியது சிட்னி சிக்சர்ஸ்

Published On 2019-01-20 12:14 GMT   |   Update On 2019-01-20 12:14 GMT
பிக் பாஷ் டி20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியை 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி. #BigBashLeague
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

சிட்னி சிக்சர்ஸ் அணியில் ஜேம்ஸ் வின்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ஜோர்டான் சிக் ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 41 ரன்களில் அவுட்டானார். வின்ஸ் 75 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால், சிட்னி சிக்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

பிரிஸ்பேன் ஹீட் சார்பில் ஜோஷ் லலோர் 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பிரிஸ்பேன் ஹீட் அணி களமிறங்கியது.

ஆனால், சிட்னி சிக்சர்ஸ் அணியின் அபாரமான பந்து வீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 18.1 ஓவரில் 98 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் சிட்னி சிக்சர்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 75 ரன்கள் எடுத்த ஜேம்ஸ் வின்ஸ் ஆட்ட நாயகனாக தேவு செய்யப்பட்டார். #BigBashLeague
Tags:    

Similar News