செய்திகள்

ஆசிய கோப்பை கால்பந்து - தாய்லாந்தை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

Published On 2019-01-06 15:58 GMT   |   Update On 2019-01-06 15:58 GMT
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் தாய்லாந்து அணியை 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. #AFCAsianCup #India #Thailand #SunilChhetri
அபுதாபி:

17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இது பிப்ரவரி 1-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய 4 நகரங்களில் நடக்கிறது.
 
இதில் அபுதாபியில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்ரி முதல் கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தாய்லாந்தின் டீராசில் டங்டா 33வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார்.

ஆட்டத்தின் 46-வது நிமிடத்தில் சுனில் சேதரி மீண்டும் ஒரு கோல் அடித்தார். இதனால் இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றது.

அவரை தொடர்ந்து, இந்திய வீரர்கள் அனிருத் தபா 68-வது நிமிடத்திலும், ஜிஜி லால் பெக்லுவா 80வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில், இந்திய அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. #AFCAsianCup #India #Thailand #SunilChhetri
Tags:    

Similar News