செய்திகள்

புரோ கபடி லீக் - குஜராத்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது பெங்களூரு

Published On 2019-01-05 16:38 GMT   |   Update On 2019-01-05 16:38 GMT
புரோ கபடி லீக் இறுதிப்போட்டியில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணியை 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்திய பெங்களூரு புல்ஸ் கோப்பையை கைப்பற்றியது. #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
மும்பை:

6-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தொடங்கியது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் பெங்களூரு புல்ஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் இறுதி சுற்றை எட்டின.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையே மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி மும்பையில் இன்று இரவு நடைபெற்றது.
 
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்து குஜராத் அணி வீரர்கள் அபாரமாக ஆடினர். அவர்கள் விரைவில் புள்ளிகளை குவிக்கத் தொடங்கினர். இதனால் முதல் பாதி முடிவில் 16 - 9 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் குஜராத் வெற்றி பெற்று விடும் என அனைவரும் நினைத்தனர்.



ஆனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், பெங்களூரு அணியினர் விஸ்வரூபம் எடுத்தனர். அந்த அணியின் பவன் ஷெராவத் அதிரடியாக ஆடினார். அவர் 25 ரெய்டுகளில் 22 புள்ளிகள் எடுத்து தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 

இறுதியில், பெங்களூரு புல்ஸ் அணி 38 - 33 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் பார்சுன் ஜயண்ட்ஸ் அணியை வீழ்த்தி புரோ கபடி லீக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #ProKabaddiLeague #BengaluruBulls #GujaratFortunegiants
Tags:    

Similar News