செய்திகள்

2வது ஒருநாள் கிரிக்கெட் - இலங்கையை 21 ரன்னில் வீழ்த்திய நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றியது

Published On 2019-01-05 14:23 GMT   |   Update On 2019-01-05 14:23 GMT
மவுண்ட் மவுங்கானுவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கையை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #NZvSL #ThisaraPerera
மவுண்ட் மவுங்கானுய்:

நியூசிலாந்து - இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
 
கொலின் முன்றோ சிறப்பாக ஆடி 87 ரன்னில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 90 ரன்னில் அவுட்டானார். கடைசி வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் நீசம் அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
 
இறுதியில், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் 4 வீரர்கள் ரன் அவுட்டாகினர்.



அதன்பின், 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் களமிறங்கினர். குணதிலகா பொறுப்புடன் ஆடி 71 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் திசாரா பெரேரா வெற்றிக்காக போராடினார். அவர் அதிரடியாக ஆடி 74 பந்துகளில் 13 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் இலங்கை 46.2 ஓவரில் 298 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக இலங்கை வீரர் திசாரா பெரேரா தேர்வானார். #NZvSL #ThisaraPerera
Tags:    

Similar News