செய்திகள்

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் - உள்ளூர் போட்டியில் அசத்திய மணிப்பூர் இளைஞர்

Published On 2018-12-12 16:35 IST   |   Update On 2018-12-12 16:35:00 IST
உள்ளூர் போட்டியில் விளையாடிய மணிப்பூர் இளைஞர் ஒருவர் மூன்று ஹாட்ரிக்குடன் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். #CoochBeharTrophy #Manipur #RexRajkumarSingh
ஐதராபாத்:

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் நகரில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்ட கூச்பெகர் டிராபியில் அருணாசலப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் அணிகள் மோதின.

இதில் முதலில் ஆடிய அருணாசல் முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில், 16 ரன்கள் முன்னிலையுடன் அருணாசல் இரண்டாவது இன்னிங்சை ஆட தொடங்கியது. மணிப்பூர் வீரர் இடதுகை பந்துவீச்சாளர் ரெக்ஸ் ராஜ்குமார் சிங் (18),  எதிரணியை துல்லியமாக பந்து வீசி திணறடித்தார்.



இவர் 9.5 ஓவர்கள் வீசி 11 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதில் 3 முறை ஹாட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 6 மெய்டன் ஓவர்களையும் வீசியுள்ளார்.

இதையடுத்து, அருணாசல் அணி 2வது இன்னிங்சில் 36 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து ஆடிய மணிப்பூர் 7.5 ஓவரில் வெற்றிக்கு தேவையான 55 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #CoochBeharTrophy #Manipur #RexRajkumarSingh
Tags:    

Similar News