செய்திகள்

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா பந்து வீசத் தடை: ஐசிசி அதிரடி

Published On 2018-12-10 15:37 GMT   |   Update On 2018-12-10 15:37 GMT
இலங்கை சுழற்பந்து வீச்சாளரான அகிலா தனஞ்ஜெயா பந்து வீச ஐசிசி தடைவித்துள்ளது. தடை தற்போதில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. #ICC
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா. இவர் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடினார். அப்போது அவரது பந்து வீச்சில் சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் தனஞ்ஜெயா இன்னும் 14 நாட்களுக்குள் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். ஐசிசியின் ஆய்வு முடிவு வெளிவரும் வரை சர்வதேச போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவார் என்று ஐசிசி தெரிவித்திருந்தது.



இந்நிலையில் அவரது பந்துவீச்சு பரிசோதனையில் ஐசிசி விதிமுறைக்கு மாறாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சர்வதேச அளவில் பந்து வீச தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வந்தது.

அகில தனஞ்ஜெயா இலங்கை அணிக்காக 5 டெஸ்ட், 30 ஒருநாள் மற்றும் 16 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்டில் 27 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 46 விக்கெட்டும், டி20-யில் 14 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
Tags:    

Similar News