செய்திகள்

வெஸ்ட் இண்டீசுடனான முதல் டெஸ்ட் - முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்காள தேசம் 315/8

Published On 2018-11-22 15:43 GMT   |   Update On 2018-11-22 15:43 GMT
வெஸ்ட் இண்டீசுடனான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மொமினுல் ஹக்கின் அபார சதத்தால் வங்காள தேசம் அணி 8 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. #BANvWI #MominulHaque
சிட்டகாங்:

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காள தேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற வங்காள தேசம் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இம்ருல் காயேசும், சவுமியா சர்க்காரும் களமிறங்கினர்.

சவுமியா சர்க்கார் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்ருல் காயேஸ் 44 ரன்களில் அவுட்டானார்.



அதன்பின்னர் இறங்கிய மொமினுல் ஹக் பொறுப்புடனும் நிதானமாகவும் விளையாடினார். அவர் அபாரமாக சதமடித்து 120 ரன்னில் வெளியேறினார். மற்ற வீரர்கள் விரைவில் வெளியேறினர். 

இதனால், முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்காள தேசம் அணி 88 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. நயீம் ஹசன் 24 ரன்னிலும், ஹைஜுல் இஸ்லாம் 32 ரன்னிலும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷானோன் கேப்ரியல் 4 விக்கெட்டும், ஜோமெல் வாரிகன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். #BANvWI #MominulHaque
Tags:    

Similar News