செய்திகள்

லா லிகா- ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட் இடையிலான ஆட்டம் டிரா

Published On 2018-10-01 14:24 GMT   |   Update On 2018-10-01 14:24 GMT
லா லிகா கால்பந்து லீக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ டி மாட்ரிட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. #LaLiga #RealMadrid
லா லிகா கால்பந்து லீக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ டி மாட்ரிட் இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘மாட்ரிட் டெர்பி (Madrid Derby)’ என்று அழைக்கப்படும்.

இதில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இரு அணி வீரர்களும் களம் இறங்குவார்கள். ரியல் மாட்ரிட் அணிக்கு சொந்தமான மைதானத்தில் ஆட்டம் நடைபெற்றதால், ரியல் மாட்ரிட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் ரியல் மாட்ரிட் அணியால் கடைசி வரை கோல் அடிக்க இயலவில்லை. அதேபோல் அட்லெடிகோ டி மாட்ரிட் அணியும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.



மற்றொரு ஆட்டத்தில் பார்சிலோனா - அத்லெடிக் கிளப் அணிகள் மோதின. ஆட்டத்தின் 41-வது நிமிடத்தில் அத்லெடிக் கிளப் அணியின் டி மார்கோஸ் கோல் அடித்து பார்சிலோனாவிற்கு அதிர்ச்சி அளித்தார்.

2-வது பாதி நேரத்தில் கோல் அடிக்க பார்சிலோனா கடும் முயற்சி எடுத்தது. 84-வது நிமிடத்தில் முனிர் கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமநிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளம் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் பாதி நேரத்தில் மெஸ்சி விளையாடவில்லை. 55-வது நிமிடத்தில்தான் களம் இறங்கினார்.
Tags:    

Similar News