செய்திகள்

முஷ்பிகுர் ரஹிம், மிதுன் ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு 240 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காள தேசம்

Published On 2018-09-26 15:25 GMT   |   Update On 2018-09-26 15:25 GMT
முஷ்பிகுர் ரஹிம், முகமது மிதுன் அரைசதங்களால் பாகிஸ்தான் வெற்றிக்கு 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது வங்காள தேசம். #AsiaCup2018 #BANvPAK
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் பாகிஸ்தான் - வங்காள தேசம் அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் நீக்கப்பட்டு ஜுனைத் கான் சேர்க்கப்பட்டிருந்தார். வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை.

லிட்டோன் தாஸ், சவுமியா சர்கார் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சவுமியா சர்கார் ரன்ஏதும் எடுக்காமல் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். லிட்டோன் தாஸ் 6 ரன்னில் ஜுனைத் கான் பந்திலும், அடுத்து வந்த மொமினுல் ஹக்யூ 5 ரன்னில் ஷஹீன் அப்ரிடி பந்திலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இதனால் வங்காள தேசம் 12 ரன்கள் எடுப்பதற்குள் முதல் மூன்று விக்கெட்டுக்களையும் இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர் ரஹிம் உடன் முகமது மிதுன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி வங்காள தேசத்தை சரிவில் இருந்து மீட்டது. இவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர்.

வங்காள தேச அணியின் ஸ்கோர் 156 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. முகமது மிதுன் 60 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இருவரும் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் குவித்து அணியை மீட்டனர்.



அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 9 ரன்னில் வெளியேறினார். 7-வது வீரராக மெஹ்முதுல்லா களம் இறங்கினார். அரைசதம் அடித்த முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி முன்னேறினார். 99 ரன்கள் அடித்த நிலையில் துரதிருஷ்டவசமாக ஷஹீன் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். 7-வது விக்கெட்டுக்கு மெஹ்முதுல்லா உடன் மெஹிதி ஹசன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் அடித்து விளையாடி விரும்பினார்கள். ஆனால் மெஹித் ஹசன் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஜுனைத் கான் பந்தில் ஆட்டமிழந்தார். மெஹ்முதுல்லா 25 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 49-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை இழக்க வங்காள தேசம் 48.5 ஓவரில் 239 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

இதனால் பாகிஸ்தானுக்கு 240 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் ஜூனைத் கான் நான்கு விக்கெட்டுக்களும், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.
Tags:    

Similar News