செய்திகள்

கேப்டன் பதவியில் இருந்து தூக்கப்பட்ட மேத்யூஸ், அணியில் இருந்தும் நீக்கம்?

Published On 2018-09-26 12:54 GMT   |   Update On 2018-09-26 12:54 GMT
ஆசிய கோப்பை படுதோல்வியால் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மேத்யூஸ், அணியில் இருந்தும் நீக்கம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. #SLvENG #Mathews
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ‘பி’ பிரிவில் இடம்பிடித்திருந்த இலங்கை அணி வங்காள தேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து தொடக்க சுற்றிலேயே வெளியேறியது.

படுதோல்வியால் இலங்கை அணியின் கேப்டன் மேத்யூஸ் அதிரடியாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.



அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரவில்லை என்றாலும், இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடிக்கும் வீரர்கள் பட்டியல் விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு விளையாட்டுத்துறை மந்திரி அனுமதி அளிக்க வேண்டும்.

இந்த பட்டியலில் மேத்யூஸ் பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரின்போது மேத்யூஸ் காயம் அடைந்தார். அதன்பின் சர்வதேச அணிக்கு திரும்பிய பின்னர் பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார்.

பெரும்பாலான போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது தசைப்பிடிப்பு காரணமாக மேத்யூஸ் அவதிப்பட்டுள்ளார். இதனால் அணி நிர்வாகம் மேத்யூஸை யோ-யோ டெஸ்ட் பரிசோதனையில் பாஸ் ஆக வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மேத்யூஸ் இங்கிலாந்து தொடரில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
Tags:    

Similar News