செய்திகள்

கரிபியன் பிரீமியர் லீக் இறுதி போட்டி - ட்ரின்பகோ அணி வெற்றிபெற 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கயானா

Published On 2018-09-16 23:03 GMT   |   Update On 2018-09-16 23:03 GMT
கரிபியன் பிரீமியர் லீக்கின் இறுதி போட்டியில் ட்ரின்பகோ அணி வெற்றி பெற 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கயானா அமேசான் அணி. #CPL #GAWvTKR
டிரினிடாட்:

கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் இன்று அதிகாலை தொடங்கியது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கயானா அமேசான் வாரியர்சின் தொடக்க வீரர்களாக கேமரூன் டெல்போர்ட், லூக் ரோஞ்சி ஆகியோர் களமிறங்கினர்.

ட்ரின்பகோ அணியின் அலி கான் முதல் பந்தை வீச, கேமரூன் டெல்போர்ட் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார்.



அவரை தொடர்ந்து இறங்கிய ஷிம்ரோன் ஹெட்மையர் நிதானமாக ஆடினர். இருவரும் பொறுமையாக ஆடவே இந்த ஜோடி அரை சதத்தை கடந்தது. அணியின் எண்ணிக்கை 52 ஆக இருந்தபோது ஹெட்மையர் அவுட்டாகினார். அதன்பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

ட்ரின்பகோ அணி சார்பில் காரி பியர்ரெ 3 விக்கெட்டும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 148 ரன்களை இலக்காக கொண்டு ட்ரின்பகோ அணி விளையாடி வருகிறது. #CPL #GAWvTKR
Tags:    

Similar News