செய்திகள்

இலங்கையை 137 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் புதிய சாதனை

Published On 2018-09-16 13:03 IST   |   Update On 2018-09-16 13:03:00 IST
ஆசிய கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காள தேசம் புதிய சாதனைப் படைத்துள்ளது. #AsiaCup2018 #BANvSL
இந்தியா, பாகிஸ்தான் உள்பட ஆறு அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று தொடங்கியது.

இலங்கைக்கு எதிரான முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் 137 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி புதிய சாதனை படைத்தது. வெளிநாட்டில் அந்த அணி மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த சாதனையை புரிந்துள்ளது.



இதற்கு முன்பு புலவாயோ (ஜிம்பாப்வே) மைதானத்தில் 121 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை வங்காளதேசம் நேற்று துபாய் மைதானத்தில் முறியடித்தது.

வங்காளதேசம் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது 6-வது மிகப்பெரிய வெற்றியாகும். அந்த அணி கடந்த ஜனவரி மாதம் டாக்காவில் இலங்கையை 163 ரன் வித்தியாசத்தில் வென்றதே சிறந்த வெற்றியாகும்.
Tags:    

Similar News