செய்திகள்

400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு

Published On 2018-08-26 07:55 GMT   |   Update On 2018-08-26 07:55 GMT
ஆசிய விளையாட்டு தொடரில் 400 மீட்டர் தடகள ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 4 பேர் பங்கேற்பதால் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. #AsianGames2018
ஜகார்தா:

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகார்தா, பாலெம்பேங் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய 7-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 7 தங்கம், 5 வெள்ளி, 17 வெண்கலம் ஆக மொத்தம் 29 பதக்கங்களை பெற்று இருந்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் 8-வது நாளான இன்று தடகளத்தில் 400 மீட்டர் ஓட்டம் நடக்கிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெறும் இந்த ஓட்டத்தில் இந்தியா சார்பில் 4 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

பெண்கள் பிரிவில் ஹிமாதாஸ் (அசாம்), நிர்மலா (ராஜஸ்தான்), ஆண்கள் பிரிவில் முகமது அனஸ் யசியா (கேரளா), ஆரோக்ய ராஜ் (தமிழ்நாடு) ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும், ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் 5.40 மணிக்கு நடக்கிறது. 4 பேர் தகுதி பெற்றுள்ளதால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. முகமது அனஸ் 2-வது அரையிறுதியில் முதல் இடத்தை பிடித்தார். இதனால் அவர் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இதேபோல தமிழகத்தை சேர்ந்த ஆரோக்யராஜூம் அரையிறுதியில் சிறப்பாக செயல்பட்டார். இதனால் அவரும் பதக்கம் பெறுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

நீளம் தாண்டும் போட்டியில் இந்தியா சார்பில் ஸ்ரீசங்கரும், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் லெட்சுமணனும் பங்கேற்கிறார்கள். #AsianGames2018
Tags:    

Similar News