செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜப்பான் வீரர் மீது புகார்

Published On 2018-08-26 00:41 IST   |   Update On 2018-08-26 00:41:00 IST
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஜப்பான் வீரர் மீது பக்ரைன் நாட்டு அணியின் தலைமை அதிகாரி முகமது பாடெர் போட்டி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். #AsianGames #HirotoInoue
ஜகர்தா:

ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்களுக்கான மாரத்தான் பந்தயத்தில் ஜப்பான் வீரர் ஹிரோடோ இனோய் தங்கப்பதக்கம் வென்றார். பக்ரைன் வீரர் எல்ஹாசன் எலாப்பாச்சி வெள்ளிப்பதக்கம் பெற்றார். இந்த போட்டியின் போது கடைசி கட்டத்தில் தன்னை முந்தி செல்ல முயன்ற பக்ரைன் வீரர் எல்ஹாசனை, ஜப்பான் வீரர் ஹிராடோ இனோய் இடித்து தள்ளியதால் அவர் தடுமாறியதாகவும், அதனை பயன்படுத்தி ஹிராடோ இனோய் தங்கப்பதக்கம் வென்று விட்டார் என்று பக்ரைன் நாட்டு அணியின் தலைமை அதிகாரி முகமது பாடெர் போட்டி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார்.



இதேபோல் ஆசிய விளையாட்டு போட்டியில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்ட தென்கொரியா வீராங்கனையை, சீனாவின் நீச்சல் வீராங்கனை ஒருவர் தாக்கிதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நீச்சல் வீராங்கனை மீது தெரியாமல் கால் பட்டு விட்டதாக மன்னிப்பு கேட்டும் அவர் தேவையில்லாமல் தாக்கினார் என்று அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.  #AsianGames #HirotoInoue 
Tags:    

Similar News