செய்திகள்

ஜிம்னாஸ்டிக்கில் தீபா கர்மாகர் 5-வது இடம்- இந்திய வீரர்கள் பதக்கமின்றி ஏமாற்றம்

Published On 2018-08-24 20:06 IST   |   Update On 2018-08-24 20:06:00 IST
ஜிம்னாஸ்டிக்கில் தீபா கர்மாகர் உள்பட இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கம் வெல்ல முடியாமல் ஏமாற்றம் அளித்தனர். #AsianGames2018
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் உள்ள ஜகர்த்தா மற்றும் பலெம்பங் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மார்கர் பெண்களுக்கான பேலன்ஸ் பீம் பிரிவில் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினார். ஆனால் 12.500 புள்ளிகள் பெற்று அவரால் ஐந்தாவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் ஒட்டுமொத்த ஜிம்னாஸ்டிக் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பதக்கமின்றி ஏமாற்றம் அளித்தனர்.

தகுதிச் சுற்றில் தீபா கர்மாகர் 12.750 புள்ளிகள் பெற்றிருந்தார். சீன வீராங்கனை சென் யில் 14.600 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கமும், கெரிய வீராங்கனை 13.400 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், மற்றொரு சீன வீராங்கனை 13.325 புள்ளிகளுடன் வெண்கல பதக்கமும் வென்றனர்.



தீபா கர்மாகர் 1000 சதவிகிதம் உடற்தகுதியுடன் இல்லை. ஒலிம்பிக்கில் 4-வது இடம்பிடித்த வால்ட் பிரிவில் அவரால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அருணா, பிரணதி ஆகியோரும், ஆண்களில் ஆஷிஷ் மற்றும் அணிகள் தோல்வியடைந்தன.
Tags:    

Similar News