செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி- இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார் வினேஷ் போகத்

Published On 2018-08-20 09:41 GMT   |   Update On 2018-08-20 09:41 GMT
மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். #AsianGames2018
ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான மல்யுத்தம் ப்ரீஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த யாக்சிமுராடோவா-வை எதிர்கொண்டார். இதில் 10 - 0 என வெற்றி பெற்று வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.



இறுதிப் போட்டிக்கு முன்னேறியதால் வினேஷ் போகத் வெள்ளி அல்லது தங்கப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பெண்களுக்கான 62 கிலோ எடைப்பிரிவில் முன்னணி வீராங்கனையான சாக்‌ஷி மாலிக் 7-9 எனத் தோல்வியடைந்தார். என்றாலும் இன்னொரு போட்டியில் வெற்றி பெற்றால் வெண்கலம் வெல்ல வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News