செய்திகள்

ஆசிய கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் உரிமையை எமிரேட்ஸிடம் வழங்கியது பிசிசிஐ

Published On 2018-08-17 15:20 GMT   |   Update On 2018-08-17 15:20 GMT
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டிடம் வழங்கியது. #AsiaCup2018
ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளான அபு தாபி மற்றும் துபாயில் நடக்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெறும் ஒரு அணி என 6 நாடுகள் பங்கேற்கின்றன.



இந்த போட்டி முதலில் இந்தியாவில் நடைபெறுவதாகத்தான் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி இந்தியா வருவதில் சிக்கல் இருந்ததால், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எமிரேட்ஸிற்கு மாத்தியது.



தற்போது போட்டியை நடத்துவதற்கு உரிமையை இந்தியா கிரிக்கெட் வாரியம் எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டிற்கு வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
Tags:    

Similar News