செய்திகள்

இம்ரான் கான் போன்று அரசியல் நோக்கம் ஏதும் தன்னிடம் இல்லை- சங்ககரா

Published On 2018-08-13 21:25 IST   |   Update On 2018-08-13 21:25:00 IST
இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஆன குமார் சங்ககரா, தனக்கு அரசியலில் ஈடுபடும் என்ற எண்ணமே இல்லை என்கிறார். #Sangakkara
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான். பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை வாங்கிக் கொடுத்த இவர், தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இம்ரான் கான், தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

தற்போது நடந்து முடிந்துள்ள பாகிஸ்தான் தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடத்தில் வெற்றி பெற்றது. வருகிற 18-ந்தேதி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் இம்ரான் கான் வழியில் இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தலைசிறந்த பேட்ஸ்மேனும் ஆன சங்ககரா அரசியலில் களம் இறங்க இருக்கிறார் என்ற செய்தி வந்தது.



இந்நிலையில் அப்படி என்ற எண்ணமே இல்லை என்று சங்ககரா தெளிவுப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘என்னைப் பற்றி வரும் யூகம் மற்றும் வதந்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்க விரும்புகிறேன். அரசியலில் ஈடுபடும் எந்த எண்ணமும் எனக்கில்லை.

நான் அரசியலில் இல்லை. இது உறுதி. நான் எப்போதும் இல்லை என்பதை என்னால் சொல்ல முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News