செய்திகள்

லார்ட்ஸ் டெஸ்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஆண்டர்சன்

Published On 2018-08-12 20:38 GMT   |   Update On 2018-08-12 20:38 GMT
இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன், லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #ENGvIND #JamesAnderson
லண்டன்:

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, இந்தியா இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. இந்தியா 130 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜயை டக் அவுட்டாக்கினார் ஆண்டர்சன். இது லார்ட்ஸ் மைதானத்தில் அவரது 100-வது விக்கெட்டாகும். இதன்மூலம் ஆண்டர்சன் லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

தனி மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் வரிசையில் ஆண்டர்சன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இலங்கையின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் இலங்கையின் கண்டி மற்றும் கல்லே மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News