செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பெறும்- மத்திய விளையாட்டு துறை மந்திரி நம்பிக்கை

Published On 2018-08-07 03:56 IST   |   Update On 2018-08-07 03:56:00 IST
கபடி ஆட்டம் விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும் என்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #RajyavardhanSingh
புதுடெல்லி:

டெல்லி மேல்-சபையில் நேற்று மத்திய விளையாட்டு துறை மந்திரி ராஜ்யவர்தன்சிங் ரத்தோர் பேசுகையில், ‘பலம், திறமை, வேகம், சிந்திக்கும் ஆற்றல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செயல்படக்கூடிய கபடி ஆட்டம் தற்போது 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளையாடப்பட்டு வருகிறது. மிகவும் குறைந்த விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தும் இந்த போட்டியை நிச்சயம் உலகம் ஏற்றுக்கொள்ளும். இறுதியாக கபடி ஆட்டம் விரைவில் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெறும் என்று நம்புகிறேன். மாநில விளையாட்டு சங்கங்கள் அனைத்தும் தேசிய விளையாட்டு கொள்கையை ஏற்று அதன்படி வெளிப்படையாக தேர்தல் மற்றும் நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தார். #RajyavardhanSingh
Tags:    

Similar News