செய்திகள்

விக்கெட் வீ்ழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடிய இஷாந்த் ஷர்மாவிற்கு 15 சதவிகிதம் அபராதம்

Published On 2018-08-05 12:44 GMT   |   Update On 2018-08-05 12:45 GMT
இங்கிலாந்து வீரர் தாவித் மலனை வீழ்த்தியதை ஆக்ரோஷமாக கொண்டாடிய இஷாந்த் ஷர்மாவிற்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 287 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 274 ரன்னில் சுருண்டது.

13 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னி்ங்சை தொடங்கியது. இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு பேர்ஸ்டோவ் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்து விளையாடினார்.



இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது. இங்கிலாந்து 70 ரன்கள் எடுத்திருக்கும்போது தாவித் மலன் 20 ரன்கள் எடுத்த நிலையில் இசாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். விக்கெட் வீழ்த்திய சந்தோசத்தில் ஆக்ரோஷமாக தாவித் மலன் அருகில் சென்று சைகை காட்டினார்.



இது ஐசிசி-யின் விதிமுறைக்கு மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதனால் போட்டிக்கான சம்பளத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமும், தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இஷாந்த் ஷர்மா அபராதத்தை ஒத்துக் கொண்டதால் விசாரணையின்றி இந்த பிரச்சனை அத்துடன் முடித்து வைக்கப்பட்டது,
Tags:    

Similar News