செய்திகள்
குக் க்ளீன் போல்டாகிய காட்சி

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்- மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 83/1

Published On 2018-08-01 12:20 GMT   |   Update On 2018-08-01 12:35 GMT
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்த்துள்ளது. #ENGvIND #1000thTest
இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார். தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணிபுரிகிறார்.

அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 6 ஓவர் முடிந்த நிலையிலேயே அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட்டார். இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. 9-வது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் அலஸ்டைர் குக் க்ளீன் போல்டானார். அவர் 13 ரன்கள் சேர்த்தார்.


ஜென்னிங்ஸ்

அடுத்து ஜென்னிங்ஸ் உடன் கேப்டன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்திய பந்து வீச்சாளர்களால் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.


ஜோ ரூட்

முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 28 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ளது. ஜென்னிங்ஸ் 38 ரன்னுடனும், ஜோ ரூட் 31 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News