செய்திகள்

அமெரிக்கா கால்பந்து லீக்கில் ஸ்வீடன் வீரர் இப்ராஹிமோவிச் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தல்

Published On 2018-07-30 09:32 GMT   |   Update On 2018-07-30 09:32 GMT
அமெரிக்காவில் நடைபெற்று வரும் மெகா லீக் சோஸர் லீக்கில் ஸ்வீடன் வீரர் இப்ராஹிமோவிச் ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். #MLS
அமெரிக்காவில் மெகா லீக் சோஸர் என்ற பெயரில் கால்பந்து லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஐரோப்பா நாடுகளில் நடத்தப்படும் கால்பந்து லீக்கில் நீண்ட காலம் விளையாடிய பின்னர், சுமார் 30 வயதிற்குப் பின் முன்னணி வீரர்கள் மெகா லீக் சோஸரில் விளையாடுவது வழக்கம்.

அந்த வகையில் ஸ்வீடன் நாட்டின் தலைசிறந்த வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிச் எல்ஏ கேலக்சி அணிக்காக விளையாடி வருகிறார். இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் எல்ஏ கேலக்சி ஓர்லாண்டோ சிட்டியை எதிர்கொண்டது.



முதல் 54 நிமிடத்தில் ஓர்லாண்டோ சிட்டி 3-2 என முன்னிலைப் பெற்றிருந்தது. எல்ஏ கேலக்சி அணிக்காக இப்ராஹிமோவிச் 47-வது நிமிடத்தில் கோல் அடித்திருந்தார். அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் எல்ஏ கேலக்சி 4-3 என வெற்றி பெற்றது.



எல்ஏ கேலக்சி அணிக்காக இப்ராஹிமோவிச் 17 போட்டிகளில் விளையாடி 15 கோல்கள் அடித்துள்ளார்.
Tags:    

Similar News